பீகாரில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு  

Estimated read time 0 min read

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ரயில்வேயின் அசன்சோல் பிரிவுக்கு உட்பட்ட லஹாபன் மற்றும் சிமுல்தலா ரயில் நிலையங்களுக்கு இடையே சனிக்கிழமை இரவு சுமார் 11.25 மணியளவில் ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

You May Also Like

More From Author