கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சி.சுப்ரமணியம், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர்.
மத்திய அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் இந்தியாவின் உணவுப் பஞ்சத்தைப் போக்க அவர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்காக அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்த ஒரு மாபெரும் தலைவரின் சேவையைப் போற்றும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; தமிழக அரசு கௌரவம்
