வெளிப்புறப் பாதிப்புக்கு எதிராகப் போராடும் சீனப் பொருளாதாரம்

Estimated read time 0 min read

சீன அரசு வெளியிட்ட அறிக்கையில் முதல் காலாண்டில் சீனப் பொருளாதார அதிகரிப்பு 5.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அதிகரிப்பு குறித்து அமெரிக்க – சீன ஒத்துழைப்பு நிதியத்தின் செயல் தலைவர் ஜான் மில்லர் ஒயிட் 17 ஆம் நாள் கருத்து தெரிவிக்கையில் இந்த எண்ணிக்கை சீன பொருளாதாரத்தின் வலிமையான உறுதி மற்றும் உயிராற்றலை வெளிப்படுத்துகிறது என்றார்.

மேலும், சீனப் பொருளாதாரத்துக்கு வெளிப்புற அறைகூவல்களைச் சமாளிக்கும் திறமை உண்டு என்பதையும்  இது காட்டுகிறது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

5.4 விழுக்காடு என்ற அதிகரிப்பு என்பது கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டில் இருந்ததை விட 1.2 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக முதலீடு மற்றும் ஏற்றுமதிக்குப் பதிலாக, உள்நாட்டுத் தேவை மற்றும் புத்தாக்கம் சீனப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் உள்நாட்டுத் தேவை பொருளாதார அதிகரிப்புக்கான பங்கு விகிதம் 80 விழுக்காட்டுக்கும் மேலாகும். புத்தாக்கத்தைப் பொருத்தவரை, முதல் காலாண்டில் உயர் தொழில் நுட்ப தயாரிப்புத் துறையின் அதிகரிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, புத்தாகத்தின் தலைமை பங்கு மென்மேலும் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது.

சிக்கலான அறைகூவல்களைச் சமாளிப்பதில் வகையில், சீனாவுக்கு செழுமையான ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு அனுபவங்கள் உள்ளன. போதுமான கொள்கைகள் மூலம், வெளிப்புறத்தின் தாக்கம் மற்றும் அறைகூவல்களைச் சமாளித்து பயனுள்ள உத்தரவாதங்களை வழங்கியுள்ளன. அமெரிக்காவின் கூடுதல் வரிக் கொள்கையானது சீனப் பொருளாதாரத்துக்கு சில நிர்ப்பந்தத்தை வழங்கிய போதிலும், நீண்டகாலம் மற்றும் தொடர்ச்சிப் போக்கில் சீனப் பொருளாதாரம் சீராக வளரும் போக்கை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Please follow and like us:

You May Also Like

More From Author