சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களுக்கிடையே ஜுன் 5ஆம் நாள் இரவு நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடலில் சர்வதேச ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தி, இது குறித்து செய்தி வெளியிட்டு கருத்து தெரிவித்தன.
கடந்த மாதத்தில், சீனாவும் அமெரிக்காவும் ஜெனீவாவில் நடத்திய பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பெறப்பட்ட சாதனைகள் பொதுவாக வரவேற்கப்பட்டன. ஆனால், நடைமுறையில், சீனாவும் அமெரிக்காவும் மிகவும் வேறுபட்டதாக செயல்பட்டு வருகின்றன. சீனா பொறுப்புணர்வுடன், அமெரிக்காவின் பரஸ்பர வரி கொள்கைக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை நீக்கி அல்லது நிறுத்தி வைத்துள்ளது. மாறாக, சீனா மீது பாகுபாடு ரீதியான கொள்கைகளை அமெரிக்கா இடைவிடாமல் கடைபிடித்து வருகின்றது. AI சில்லு ஏற்றுமதிக்கான கட்டுபாட்டு வழிகாட்டுதல்களை அமெரிக்க அரசு வெளியிட்டது, சில்லு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் EDA மென்பொருள் சீனாவிற்கு வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க அரசு உத்தரவளித்தது, சீன மாணவர்களின் விசாகளை ரத்து செய்ய அறிவித்தது முதலியவை இடம்பெற்றுள்ளன. இந்தச் செயல்பாடுகள் ஜெனீவா பேச்சுவார்த்தையின் பொது கருத்துக்களுக்குப் புறும்பானவை. மட்டுமல்லாமல், இரு நாட்டுறவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன.
இந்த முக்கிய தருணத்தில், இரு நாட்டு அரசுத்தலைவர்களின் உரையாடலில், தங்களது கவலைகளை வெளிப்படுத்தி, இரு தரப்புறவின் வளர்ச்சி திசையை வழிநடத்தியது, சீனா மீதான அமெரிக்காவின் எதிர்மறை செயல்பாடுகளைக் குறைக்கவும், பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையின் சாதனைகளை நடைமுறைப்படுத்தவும், உரையாடல் அமைப்புமுறையின் இயக்கத்தை நிலைநாட்டவும் துணைபுரியும்.
தவிரவும், இந்த உரையாடலின்போது சீனா தனது கவனங்கள் மற்றும் கோரிக்கைகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் கலந்தாய்வு மூலம் கருத்து வேற்றுமையைத் தீர்வு காண விரும்புவதோடு, மறுபக்கத்திலிருந்து வரும் தீவிர அழுத்தத்தையோ, அல்லது பேச்சுவார்த்தையின்போது மிரட்டுவதையோ சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. கூறப்படும் உடன்படிக்கைகளுக்கு ஈடாக சீனா தனது கோட்பாடுகளை விடுக்கொடுக்காது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
