Post Views: 7
சீன வணிக துறை அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டம் 10ஆம் நாள் மாலை நடைபெற்றது. இதில் இவ்வமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் கூறுகையில்,
138ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி அக்டோபர் 15ஆம் நாள் முதல் நவம்பர் 4ஆம் நாள் வரை 3 கட்டங்களாக குவாங்ச்சோ மாநகரில் நடைபெறவுள்ளது என்றார்.
இந்த பொருட்காட்சியின் நிலப்பரப்பு 15 இலட்சத்து 50 ஆயிரம் சதுரமீட்டரைத் தாண்டும். இதில் 74 ஆயிரத்து 600 காட்சியிடங்கள் அமைக்கப்படும். 32 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளன. இவற்றில் 3600 தொழில் நிறுவனங்கள் முதன்முறையாக கலந்துகொள்ளவுள்ளன. இதைத் தவிர்த்து, ஏற்றுமதி வர்த்தக பொருட்களை சீனாவில் விற்பனை செய்யும் நடவடிக்கையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.