போர் நிறுத்தம் பற்றிய கூட்டறிக்கையில் கம்போடியாவும் தாய்லந்தும் கையொப்பமிட்டன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில்,
கம்போடியாவும் தாய்லந்தும் கையொப்பமிட்ட போர் நிறுத்த கூட்டறிக்கைக்கு சீனா வரவேற்பு தெரிவித்தது. சிக்கலான சர்ச்சையைத் தீர்க்கும் பயனுள்ள வழிமுறையாக பேச்சுவார்த்தை திகழ்கின்றது. சீனாவும் ஆசியானும் சர்வதேச சமூகமும், இதற்காக பாடுபட்டு வருகிறோம். இரு நாடுகள், பன்முக விரிவான பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு மேடைகளையும் நிபந்தனைகளையும் வழங்க சீனா விரும்புகின்றது. கம்போடியாவும் தாய்லந்தும் போர் நிறுத்த நிலைமையை நிதானப்படுத்துவது, பரிமாற்றத்தை மீண்டும் மேற்கொள்வது, அரசியல் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவது, உறவு முன்னேற்றத்தை நனவாக்குவது, பிரதேச அமைதியையும் வளர்ச்சியையும் பேணிக்காப்பது ஆகியவற்றிற்கு சீனா சொந்த வழிமுறையின் மூலம் பாடுபடும் என்றார்.
