சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் டியேன்ட்சுவான் வட்டத்திலுள்ள நீர்வள நவீன வேளாண்மைத் தோட்டத்தில் ஸ்டர்ஜன் மீன்களின் இனப்பெருக்கம், வளர்ப்பு, செப்பனீடு, விற்பனை மற்றும் பொழுதுபோக்கை ஒன்றிணைந்து வளர்ந்துள்ள முழு தொழில் சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. அதில் 4000 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய கேவியர் செப்பனீட்டு ஆலை உள்ளது. இது மேற்குச் சீனாவின் மிகப் பெரிய ஆலையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிருவாகத்தின் அங்கீகாரத்தையும் கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இத்தோட்டத்தில் 1938 டன் எடையுடைய நீர்வளப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 63 டன் கேவியரும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இத்தோட்டத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 68 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. அவற்றில், கேவியர் உற்பத்தி மற்றும் விற்பனை அளவு உலகின் 14 விழுக்காட்டை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் கேவியர் உற்பத்தியில் 14 விழுக்காடு வகிக்கும் சீனாவின் சிறப்பு வட்டம்
Estimated read time
0 min read
