ஈரானில் வெடித்தது மக்கள் புரட்சி: பலர் பலி, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கோஷம்  

Estimated read time 0 min read

ஈரானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
இதில் பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்துள்ளதால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக ஈரானின் தலைநகர் டெஹ்ரான் முதல் கிராமப்புறப் பகுதிகள் வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
அந்நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக “சர்வாதிகாரி ஒழிக” என முழக்கமிட்டு வருகின்றனர்.
புதிய ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. லோர்தேகன், குதாஷ்ட் மற்றும் இஸ்பஹான் ஆகிய மாகாணங்களில் நடைபெற்ற மோதல்களில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author