அணு ஆயுதங்களைக் கையாள்வது குறித்து ஜப்பான் அரசு தொடர்ந்து அண்மையில் மேற்கொண்ட ஆபத்தான கூற்றுக்களும் செயல்களும், உலகின் அமைதியான வளர்ச்சிக்கு கடும் அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ளது.
1967ஆம் ஆண்டில், ஜப்பான் தலைமையமைச்சராக இருந்த சடோயிஷகு, அந்நாட்டின் மேற்சபை கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது, ஜப்பான் அணு ஆயுதங்களை கையாளாது, தயாரிக்காது, இறக்குமதி செய்யாது என்னும் அணு ஆயுதமின்மை கொள்கையை வெளியிட்டார்.
1971ஆம் ஆண்டில், இக்கொள்கை அதிகாரப்பூர்வமாக ஜப்பானியப் பிரதிநிதிகள் அவையின் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக, கடந்த சில ஆண்டுகளில், ஜப்பான் அரசியல் துறையில் வலதுமயமாக்கம் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக, சனே தகைச்சி ஜப்பானிய தலைமையமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு, இக்கொள்கையை திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது, ஜப்பானில் இராணுவமயமாக்கம் மீண்டும் தலைதூக்கி, பேராசையை வெளிப்படையாக காட்டுகிறது.
வரலாற்று அனுபவங்களின்படி, ஜப்பானிய இராணுவமயமாக்கத்தின் மீதான கட்டுப்பாடு இழந்து விட்டால், இது ஆக்கிரமிப்புப் பாதையில் மீண்டும் நடைபோடும். அணு ஆயுதங்களைக் கொண்டால், ஜப்பான் ஆக்கிரமிப்பு எனும் வெளிநாட்டுக் கொள்கையில் மீண்டும் ஊன்றி நிற்கக் கூடும். உரிமை பிரதேச சர்ச்சை, பிராந்திய விவகாரம் உள்ளிட்டவற்றில், அணு அச்சுறுத்தலை வெளியிட்டு, குறிப்பிட்ட அளவில் மோதல் மற்றும் அணு ஆயுத போராட்டத்தைத் தொடுக்கக் கூடும். இது, ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகின் அமைதியான வளர்ச்சிக்குப் பேரழிவு ஏற்படுத்தும்.
அணு ஆயுதங்களைக் கையாளும் ஜப்பானின் சூழ்ச்சியைத் தடுத்து, 2ஆவது போருக்கு பிந்தைய அமைதி ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டும். இது, வரலாற்று மதிப்பளிப்பது, எதிர்காலத்திற்குப் பொறுப்பேற்பது, அணு ஆயுதமின்மை உலகத்தை உருவாக்கி, உலகின் பாதுகாப்பையும் நிதானத்தையும் பேணிக்காப்பதற்கான ஒரே ஒரு வழிமுறையாகும் என்பது உறுதி.
