இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பைப் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை நாளை (ஜனவரி 5) முதல் தொடங்குகிறது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, டிக்கெட்டுகள் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளுக்காக விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி, குடியரசு தின அணிவகுப்புக்கு (ஜனவரி 26) ரூ.20 மற்றும் ரூ.100, முழு ஆடை ஒத்திகைக்கு (ஜனவரி 28) ரூ.20 மற்றும் பாசறை திரும்புதல் விழாவுக்கு (ஜனவரி 29) ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பை நீங்களும் நேரில் காணலாம்; இதை பண்ணுங்க
