மங்காத்தா… வேற லெவல் அறிவிப்பு..!! 

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கொடிகட்டி பறப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் நடிகைகள் திரிஷா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, நடிகர் பிரேம்ஜி, நடிகர் அர்ஜூன், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் அப்போதே சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது வரை ரசிகர்களின் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாக மங்காத்தா இருக்கிறது. இந்த நிலையில் நீண்ட காலமாக மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுகுறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அதன்படி ஜனவரி 23ஆம் தேதி மங்காத்தா படம் ரிலீஸ் செய்யப்படுவதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author