இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அடுத்தகட்ட நகர்வு! வாஷிங்டன் செல்லும் இந்தியக்குழு  

Estimated read time 1 min read

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக இந்தியத் தூதுக்குழு இந்த மாத இறுதியில் வாஷிங்டன் செல்லவுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய வர்த்தக முன்னுரிமைகளை மேம்படுத்துவது குறித்து “உயர் உற்பத்தித் திறன்” கொண்ட சந்திப்பை நடத்தியதாக செர்ஜியோ கோர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“அமெரிக்காவும் இந்தியாவும் ஏற்கனவே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன; இந்தியத் தூதுக்குழுவை வாஷிங்டனுக்கு வரவேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author