சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,12,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,273 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,184 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையும் என்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
