கேரளாவில் வரலாறு காணாத வகையில் வாக்குபதிவு!

Estimated read time 0 min read

கேரள மாநில சட்டசபைக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

கேரள மாநில சட்டசபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் துவங்கி நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த தேர்தல் வாக்குப்பதிவில் 75% மேல் வாக்குகள் பதிவாகி இருந்தது. காலை 7:00 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு வெயிலின் தாக்கம் காரணமாக மூன்று மணி நேரம் குறைந்த அளவு வாக்காளர்கள் வந்து வாக்குகள் செலுத்தினார்கள்.

தொடர்ந்து மூன்று மணிக்கு மேல் மீண்டும் விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடைபெற்றது. இளம் வயது வாக்காளர்கள் முதல் வயதானவர்கள் வரை ஆர்வமுடன் வந்து வாக்குகளை அளித்தனர்.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் செல்போன் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்ற தடை பிறப்பிக்கப்பட்டிருந்ததால் வாக்கு செலுத்தி வரக்கூடிய வாக்காளர்கள் தங்களுடைய செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியானது நடைபெற்றது இந்த தேர்தலில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி சதீசன், கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட நடிகர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

You May Also Like

More From Author