சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – அஸ்வத்தாமன் கண்டனம்!

Estimated read time 1 min read

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட விசிக-வினருக்கு பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100% வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

அதில் விசிக குண்டர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசத்தை நேசிக்கிற மாணவர்கள் கூட்டம் என்பதால் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர் என கூறியுள்ளார்.

விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும், காவல்துறை இந்த கொடூர தாக்குதல்களின் அடிப்படையில் விசிக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author