‘ஜனநாயகன்’ வசூலில் 75 – 80% ஷேர் கேட்கின்றனர்!

Estimated read time 1 min read

ஜனநாயகன் படத்துக்கு வசூலில் 75 முதல் 80 சதவீதம் ஷேர் கேட்பதால் தான் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “பராசக்தியை விட ஜனநாயகன் படத்துக்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கும். ஆனால் ஜனநாயகன் படத்துக்கு வசூலில் 75 முதல் 80 சதவீதம் ஷேர் கேட்பதால் தான் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளடு. நாங்கள்

70% வரை தர தயாராகவே உள்ளோம். இந்த இழுபறியால் தான் ஜனநாயகன் புக்கிங்கிற்கு தாமதமாகிறது. இதற்கு வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை. எந்தவித அழுத்தமும் எங்களுக்கு இல்லை. விஜய்யிடம் இதை பற்றி பேசியிருக்கிறேன்.

சல்லியர்கள் திரைப்படத்திற்கு PVR சினிமா Screen ஒதுக்காதது குறித்து முன்கூட்டியே எங்களுக்கு தகவல் இல்லை. முன் கூட்டியே தகவல் தெரிந்திருந்தால் PVR சினிமா உடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்திருப்போம். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமிழ் உணர்வு இல்லை என சிலர் சொல்கின்றனர். உண்மையில் நாங்கள் தமிழ் உணர்வு மிக்கவர்கள். சில தவறுகள் நடைபெறும். அதை தெரிவித்தால் கண்டிப்பாக திருத்திக் கொள்வோம்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author