தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன – பிரேமலதா..!

Estimated read time 1 min read

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி உள்பட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? என மாவட்டச் செயலாளர்கள் தங்களின் கருத்துகளை எழுதி பெட்டியில் போட்டுள்ளனர். அவற்றை தனிப்பட்ட முறையில்நான் பிரித்து படிக்க இருக்கிறேன். அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணி குறித்து முடிவு செய்து வரும் 9 ஆம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. முழுக்க முழுக்க தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி இருக்கும்” என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author