ஷி ச்சின்பிங்-முகமது தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அழைப்பை ஏற்று, 20ஆம் நாள் மாலை சௌதி அரேபிய இளவரசரும் தலைமை அமைச்சருமான முகமதுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சௌதி அரேபியாவுடனான உறவில் சீனா உயர்வாக கவனம் செலுத்துகின்றது. இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். சௌதி அரேபியாவுடன் இணைந்து, இதை வாய்ப்பாக கொண்டு, ஒன்றுக்கு ஒன்று நெடுநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-அரேபிய நாட்டுறவு வளர்ச்சிக்கு வழிக்காட்ட சீனா விரும்புகின்றது என்றார்.

மத்திய கிழக்கு பகுதி நிலைமை குறித்து ஷி ச்சின்பிங் கூறுகையில்,

உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும். அமைதியை மீட்டெடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் சீனா ஆதரவு அளிக்கும். ஹோர்முஸ் நீரிணையின் இயல்பான போக்குவரத்தை நிலைநிறுத்துவது இப்பிரதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நலனுக்குப் பொருந்தியது என்றார்.

You May Also Like

More From Author