தைவான் சுதந்திரம் குறித்தும், ஐ.நா பேரவையின்
2758வது தீர்மானத்தில் தைவான் நீரிணை அமைதி மற்றும் நிதானம் குறித்து, தைவான்
பிரதேசத் தலைவர் லை ட்சிங் டெ 10ம் நாள் உரை நிகழ்த்தினார். இது குறித்து நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ
ஜியா குவன் 10ம் நாள் கூறுகையில்,
லை ட்சிங் டெவின் உரை, உண்மைகளைத் திரித்துக்காட்டி, பொது
மக்களை தவறான தகவலை கொண்டு திசைதிருப்ப முயல்கிறது. அவர், ஜனநாயகத்தைப்
பயன்படுத்தி மேலாதிக்கத்தை எதிர்ப்பது என்ற போலி கூற்றைக் கூறி, தைவான் சுதந்திரம்
தொடர்பான பிரிவினை உரையை மீண்டும் நிகழ்த்தினார். இவை, வரலாற்றின் உண்மை மற்றும்
சர்வதேச பொது கருத்துகளுக்குச் சவால் விடுத்துள்ளன. இதன் மூலம், லை ட்சிங் டெ,
தொல்லை, ஆபத்து மற்றும் போர் ஏற்படுத்தும் நபர் ஆவார் என்பது மீண்டும் வெளி
உலகிற்குத் தெரிய வந்துள்ளது. வரலாற்றின் உண்மையைத் திரித்துப் புரட்டி, ஐ.நா
பேரவையின் 2758வது தீர்மானத்துக்குச் சவால் விடுத்த
அனைத்து செயல்களும், சீனாவின் இறையாண்மைக்கும், ஐ.நாவின் செல்வாக்கிற்கும்,
சர்வதேச ஒழுங்கிற்கும் சவால் விடுக்கும்.
இவை அபட்டமானதாகவும் ஆபத்தானதாகவும் உள்ளன என்று குறிப்பிட்டார்.
