காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி  

Estimated read time 1 min read

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (ஜனவரி 5) மாலை சோனியா காந்திக்கு திடீரென தீவிர இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது அவர் மார்பு நோய் நிபுணர்களின் (Chest Physician) நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

More From Author