தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அமெரிக்க சிறப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைநகர் காரகாஸில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் துப்பாக்கி சத்தங்களும், குண்டுவெடிப்புகளும் கேட்ட வண்ணம் உள்ளன.
ஜனாதிபதி மாளிகையின் மீது ட்ரோன்கள் காணப்பட்டாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் அமெரிக்கா “சம்பந்தப்படவில்லை” என்று கூறியது.
துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் CNN இடம் கூறினார்.
வெனிசுலாவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு; தலைநகர் காரகாஸில் அதிகரிக்கும் பதற்றம்
