சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் 22ஆம் நாள், ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஜி20 நாட்டுத் தலைவர்களின் 20வது உச்சிமாநாட்டின் முதல் கட்ட கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், உலகப் பொருளாதார மீட்சி மந்தமடைந்துள்ள நிலையில், நாம் தாளார வர்த்தகத்தை உறுதியுடன் பேணிக்காத்து, திறப்பு தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். கருத்து வேற்றுமை மற்றும் முரண்பாடு குறித்து, நாம் வேற்றுமையுடன் கருத்தொற்றுமையை கண்டறிவதில் ஊன்றி நின்று, சமத்துவ முறையில் கலந்தாய்வு மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும். ஆட்சிமுறை பற்றிய இன்னல்கள் குறித்து, நாம் பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, வளரும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமையை உயர்த்தி, மேலும் நேர்மையான மற்றும் திறப்பான சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்றார்.
மேலும், ஜி20 உறுப்பு நாடுகள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, உலக வர்த்தக அமைப்பை மையமாக கொண்ட பலதரப்புவாத வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் தெரிவித்தனர்.
