நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

Estimated read time 1 min read

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நிறைவு பெற்றது.

மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 30 நகரங்கள் என மொத்தம் 552 நகரங்களில் சுமார் ஐந்தாயிரத்து 500 மையங்களில் 22 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.

இதில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு தோடு, மூக்குத்தி, செயின் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர், மெட்டல் டிடெக்டர் சோதனை மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்கு பிறகு தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

You May Also Like

More From Author