ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதிக் குழுவின் துணைத் தலைவர் சுன் லெய் 5ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் வெனிசுலா நிலைமை பற்றிய அவசர கூட்டத்தில் உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஒரு தலைசார்பான, சட்டப்பூர்வமற்ற, பழிவாங்கல் நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்றார்.
அமெரிக்காவின் மேலாதிக்கம் பல தரப்பு வாதத்திற்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தூதாண்மை முயற்சியை விட்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது, இலத்தீன் அமெரிக்க–கரீபியன் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தலாக அமையும். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது என்றார்.
