பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து  

Estimated read time 0 min read

உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார்.
சிங்கப்பூரின் கலாச்சார ஒருமைப்பாட்டையும், அங்கு வாழும் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த வாழ்த்து அமைந்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்” என்று தமிழ் மொழியில் பதிவிட்டுள்ளார்.
மேலும், பொங்கல் திருநாள் என்பது அறுவடை திருவிழாவாக மட்டுமல்லாமல், புதிய தொடக்கங்கள், செழிப்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author