NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்?  

Estimated read time 1 min read

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MD/MS) நீட் தேர்வில் (NEET-PG 2025), இடஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி சதவீதத்தைப் ‘பூஜ்யம்’ (Zero Percentile) என மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்துள்ளது.
இதன் மூலம், 800 மதிப்பெண்களுக்கு மைனஸ் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட, தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவ இடங்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொதுப் பிரிவினருக்கான தகுதி சதவீதம் 50-லிருந்து 7-ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 45-லிருந்து 5-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இது பூஜ்யமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author