டெல்லியில் நடைபெற்ற விழாவில் சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
தேசிய அளவில் கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் சங்கீத நாடக அகாடமி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான விருதுகளை 115 கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
சங்கீத நாடக அகாடமியின் உயரிய கௌரவமான அகாடமி ஃபெல்லோஷிப் 7 பேருக்கும், அகாடமி புரஸ்கார் 108 கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டன. ஃபெல்லோஷிப் பெற்ற கலைஞர்களுக்கு 3 லட்ச ரூபாயும், அகாடமி புரஸ்கார் பெற்ற கலைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் பரிசாக வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கௌரவித்தார். நாடக நடிகர்களுக்கான பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாகை சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது
