தனது தளத்தில் அதிகரித்து வரும் மோசடிகளை எதிர்த்துப் போராட, மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்ப நிறுவனம், “மோசடி கண்டறிதல்” என்றழைக்கப்படும் ஒரு புதிய சோதனை அம்சத்தை அறிவித்துள்ளது.
இது, சாதனத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தி, மோசடியாக இருக்க வாய்ப்புள்ள உரையாடல்களை கண்டறியும்.
மாறிவரும் மோசடி உத்திகளை முறியடிப்பதற்கும், பயனர்களின் தனிப்பட்ட செய்திகளை முழுமையான end-to-end encryption மூலம் பாதுகாப்பதற்கும் மெட்டா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பின் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி, ஸ்பேம் குறித்து பயனர்களை எச்சரிக்கும்; அதை எப்படி ஆக்டிவேட் செய்வது?
