மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில், ஒன்று புள்ளி 86 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது தெரியவந்தது.
இதனை மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வெளி உலகுக்கு அம்பலப்படுத்தினார்.
இந்த நிலையில், நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது தான் எதிர்கொண்ட இன்னல்கள்பற்றி சி.ஏ.ஜி., இயக்குநர் ஜெனரலாக இருந்த சேஷ் குமார், தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், அரசியல் தாக்குதல்கள், அதிகார தடைகள், ஊடகங்களின் தலையீடுகள் எனப் பல சோதனைகள் வந்தபோதும், தங்களது குழு உறுதியுடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தாங்கள் கேட்ட கோப்புகளைக் கொடுக்காமல் அப்போதைய அரசு தாமதப்படுத்தியதாகக் கூறியுள்ள அவர், நிலக்கரி அமைச்சகத்தில், தங்கள் குழுவினருக்கு துர்நாற்றம் வீசும் கழிப்பறை அருகிலேயே அறை ஒதுக்கப்பட்டதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
