ஷிச்சின்பிங் படைப்பின் முதலாவது மற்றும் இரண்டாவது சிறப்புத் தொகுதிகள், தனிச்சிறப்பு வாய்ந்த சீனாவின் நவீனம் பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்துத் தொகுதிகள் ஆகிய நூல்கள் அண்மையில், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டன.
இப்புத்தகங்கள் தொடர்பாக ஜூலை 17ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வரும் ஹாங்காங் புத்தகக் கண்காட்சியில் கருத்தரங்கு ஒன்றும் நடைபெற்றது.
மேற்கூறிய இம்மூன்று படைப்புகள் புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றி ஷிச்சின்பிங்கின் சிந்தனையைப் புரிந்து கொள்ள ஹாங்காங் வாசகர்களுக்குத் துணை புரியும். ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி லீ கா சியூ ஜான் ஹாங்காங்கிலுள்ள சீன நடுவண் அரசின் இணைப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முதலியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்