2025ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5 விழுக்காடு உயர்வு

சீனப் பொருளாதாரம் பற்றிய தரவுகளை சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் தலைவர் காங் யீ சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 19ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

2025ஆம் ஆண்டில், சீனத் தேசிய பொருளாதாரம் சிக்கலான சூழ்நிலையில் இன்னல்களைச் சமாளித்து முன்னேறி, உயர் தர வளர்ச்சி புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கான அனைத்து முக்கிய இலக்குகளும் கடமைகளும் நனவாக்கப்பட்டு, 14ஆவது ஐந்தாண்டு திட்டம் முற்றிலும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

முதற்கட்ட கணக்கீட்டின்படி, 2025ஆம் ஆண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே 40 இலட்சத்து 18 ஆயிரத்து 790 கோடி யுவானாயுடன், 2024ஆம் ஆண்டை விட 5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார்.

 

 

You May Also Like

More From Author