சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபேய்சல், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான அப்டுல்லா ஆகியோருடன் மார்ச் 4ம் நாள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ஃபேய்சல், அப்டுல்லா ஆகியோர் மத்திய கிழக்கு பகுதியின் புதிய நிலைமை குறித்து அறிமுகம் செய்தனர்.
ஈரான் நிலைமை குறித்த சீனாவின் நிலைப்பாட்டை வாங்யீ மீண்டும் வலியுறுத்தினார். அமைதிக்கான நம்பிக்கையைக் கைவிடாத சீனா, தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்றி, இணக்க முயற்சிக்காக மத்திய கிழக்கு பகுதி பிரச்சினைக்கான சிறப்பு தூதரை இப்பகுதிக்கு அனுப்பி, அமைதி மற்றும் நிதானத்தின் மீட்டெடுப்பை முன்னேற்றும். ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா ஆகியவை, சீன குடிமக்கள் மற்றும் சீன நிறுவனங்களின் பாதுக்காப்புக்குத் தொடர்ந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.
