கினி குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத்தூதரும், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவருமான செங் சியேன்பாங், 17ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் கொனாகொலிவில் நடைபெற்ற புதிய அரசுத் தலைவர் டூம்போயாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்.
அப்போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இனிமையான வாழ்த்துகளை டூம்போயாவுக்கு கூறிய செங் சியேன்பாங், இரு நாட்டுறவின் வளர்ச்சியில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்றார். மேலும், கினியுடன் இணைந்து, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாடுகளுக்கிடையில் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புகளை அதிகரித்து மேலதிக சாதனைகளைப் பெற சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
