ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சிலின் 23ஆவது கூட்டம் பெய்ஜிங் நேரப்படி ஜுலை 4ஆம் நாள் பிற்பகல் துவங்கியது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பெய்ஜிங்கில் இருந்து காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.
சிக்கலாக மாறி வரும் உலகில் மனிதகுலம் முன்கண்டிராத சவால்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், அருமையான வாழ்க்கை மீதான பல்வேறு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புதான், எங்கள் குறிக்கோளாகும். அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றை நோக்கும் கால ஓட்டம் தடுக்கப்பட முடியாதது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.
தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, போட்டியை விட மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தத்தமது மைய நலன் மற்றும் கவனத்துக்கு மதிப்பளித்து, ஒன்று மற்றதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். பிரதேசத்தில் நிரந்தர அமைதியை நனவாக்குவது எங்கள் பொது கடமையாகும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பை செயல்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் நாடுகளுக்கிடையேயான கருத்து வேற்றுமை மற்றும் முரண்பாட்டைத் தீர்த்து, பிரதேச பாதுகாப்பை உறுதியுடன் பேணிக்காக சீனா விரும்புகிறது.
பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது பிரதேச நாடுகளின் பொது கடமையாகும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தில் நிலைத்து நின்று, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பு மூலம் பல்வேறு நாட்டு மக்கள் வளர்ச்சியின் சாதனையிலிருந்து பயனடையச் செய்ய சீனா விரும்புகிறது.
இவ்வாண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றத்தின் 3ஆவது கூட்டத்தை சீனா நடத்த உள்ளது. பல்வேறு தரப்புகள் இதில் பங்கெடுத்து, இந்த முன்மொழிவை மேலும் சிறந்த முறையில் நடைமுறைபடுத்த வரவேற்கின்றோம். மேலும், பல்வகை நாகரிகங்களின் இசைவான வளர்ச்சி, பொது மக்களின் அருமையான எதிர்பார்ப்பாகும். பல்வேறு தரப்புகள் உலகளாவிய நாகரிக முன்னெடுப்பை நடைமுறைப்படுத்தி, வேறுபட்ட நாகரிகங்களின் சகவாழ்வையும் பல்வேறு நாட்டு மக்களின் நட்புறவையும் முன்னேற்ற வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.