லாவோஸின் விண்யென்டியான் நகரில் நடைபெற்ற 27வது சீன-ஆசியான் நாடுகளின்(10+1)தலைவர்கள் கூட்டத்தில், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அக்டோபர் 10ஆம் நாள் பங்கெடுத்தார்.
லீ ச்சியான் கூறுகையில், கடந்த ஆண்டு, சீன-ஆசியான் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம், புதிய முன்னேற்றத்தைப் பெற்று, இரு தரப்பு மக்களுக்கு பயன்தரும் முறையில் நன்மை புரிந்துள்ளது.
ஆசியான் நாடுகளுடன், சந்தை கட்டுமானம் மற்றும் பகிர்வு துறையில் முயற்சிகளை மேற்கொண்டு, இரு தரப்புகளுக்கு மேலும் வலிமையான மற்றும் நீண்டகால இயக்காற்றலையும், பிரதேச மற்றும் உலகத்தின் கூட்டுச் செழுமைக்கு மேலும் உறுதியான ஆதரவையும் வழங்க சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், ஆசியான் நாடுகளுடன் முயற்சிகளை மேற்கொண்டு, ஆசியாவின் மேலும் இனிமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புகிறது. முதலாவதாக, கொட்டியான தொடர்பு இணையத்தை உருவாக்கி, அடிப்படை வசதிக் கட்டுமானத்தை ஆக்கமுடன் முன்னேற்ற வேண்டும்.
இரண்டாவதாக, புதிதாக வளரும் தொழில் துறைகளுக்கான ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, எண்ணியல் பொருளாதாரம், பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளிலுள்ள ஒத்துழைப்பு உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர வேண்டும். மூன்றாவதாக, பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஆழமாக்கி, உலக நாகரிக முன்மொழிவின் நனவாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசியான்-சீனப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் வலிமையான வளர்ச்சிப் போக்கினை, இக்கூட்டத்தில் பங்கெடுத்த ஆசியான் நாட்டுத் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினர். பல்வேறு துறைகளில் இரு தரப்புகளின் ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்று, இப்பிரதேச மக்களின் நன்மையைப் பெரிதும் அதிகரித்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.