ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தின் லதா தர் மலைப் பகுதியில் உள்ள ஷங்க்பால் ஆலய திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,897 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் விழாவின் நிறைவு நாளையொட்டி குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.