சீனாவுக்கு வந்து “1+10” உரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள முக்கிய சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் தலைவர்களைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 10ஆம் நாள் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை முன்னேற்றுவதற்கான சீனாவின் மனஉறுதி மாறாது என்றார்.
டிசம்பர் 9ஆம் நாள் சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்த போது சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் கூறுகையில், பல்வேறு தரப்புகளுடன் உலகப் பொருளாதாரத்தின் சீரான மற்றும் நிதானமான வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற சீனா விரும்புகின்றது.
பல்வேறு தரவுகளின் படி, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு சுமார் 30 விழுக்காடாக உள்ளது. உலக வினியோகச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதைத் தவிர, உலகப் பொருளாதாரம் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை எவ்வாறு பெற முடியும் என்பது பற்றிய விவாதத்தையும் “1+10” உரையாடல் கூட்டம் முன்னேற்றியுள்ளது.