தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் செங்கோட்டையன்  

Estimated read time 0 min read

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையனுடன், அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
கூடுதலாக, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹசானா உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

You May Also Like

More From Author