அதிமுக இணைப்பா? – எல்லாம் ஆண்டவன் கையில் தான்..! – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!

Estimated read time 0 min read

சென்னையில் இருந்து விமானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் அனைத்து சக்திகளும், ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாய கோரிக்கையாக உள்ளது. என் கோரிக்கையும் அதுதான்,” என்றார்.

அப்போது, மீண்டும் அ.தி.மு.க.வில் நீங்கள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆண்டவன் கையில் உள்ளது’ என்றார்.

இதுபோல் கூட்டணியில் உங்களை இணைப்பது குறித்து டி.டி.வி.தினகரன் பேசினாரா? என்றும் கேட்கப்பட்டது. “டி.டி.வி.தினகரன் உள்பட யாரும் என்னை அழைக்கவில்லை, பேசவில்லை” எனவும் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

You May Also Like

More From Author