9-வது முறையாக பட்ஜெட் தாக்கல்: நிர்மலா சீதாராமன் படைக்கும் புதிய வரலாற்றுச் சாதனை..!

Estimated read time 1 min read

வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம் ஒரே பிரதமர் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார்.

இதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டத்தில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதுதான் இந்திய பாராளுமன்ற வரலாற்றில் ஒரு அமைச்சர் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்ததாகும். மொரார்ஜி தேசாய் 1959 முதல் 196 வரை நிதியமைச்சராக இருந்தபோது 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1967 முதல் 1969 வரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் பி. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். நிர்மலா சீதாராமன் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி 2-வது முறையாக வெற்றி பெற்றதும், முழு நேர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2024-ல் பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றி பெற்றதும் தொடர்ந்து நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவமபர் 26-ந்தேதி ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். மன்மோகன் சிங் 1991 முதல் 1995 வரை தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author