தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் தொடங்க உள்ளார்.
மொத்தம் 14 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
விஜயின் பிரசார சுற்றுப்பயணம், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், திட்டமிடப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 20-ஆம் தேதியுடன் இறுதியாக முடிகிறது.
பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம் செய்யும் விஜய், அக்டோபர் 5ஆம் தேதி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் பிரசாரம் செய்கிறார்.
செப்டம்பர் 13 முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் நடிகர் விஜய்
