மகாராஷ்டிர மாநிலத்தின் எட்டாவது துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியின் தலைவருமான அஜித் பவார் (66), இன்று (ஜனவரி 28, 2026) காலை நடைபெற்ற கோரமான விமான விபத்தில் காலமானார்.
பார்மதி நகராட்சித் தேர்தலை முன்னிட்டு நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக, மும்பையிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட ‘லியர் ஜெட் 45’ ரக விமானத்தில் அஜித் பவார் புறப்பட்டார்.
காலை 8:45 மணியளவில் பார்மதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தின் ஓரத்தில் மோதி வெடித்துச் சிதறியது.
விமானத்தில் அஜித் பவார், அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விமானிகள் உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர். விபத்தில் ஆறு பேருமே உயிரிழந்துவிட்டதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்
