2024-ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாடு தொடங்கவுள்ளது

 

சீன வெளியுறவு அமைச்சகம் 23ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாடு தொடர்பான தகவல்களை எடுத்துக் கூறியது.

அதன்படி, 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாடு செப்டம்பர் 4ஆம் முதல் 6ஆம் நாள் வரை, பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

நவீனமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றி, உயர் நிலை சீன-ஆப்பிரிக்க பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைப்பது என்பது நடப்பு உச்சிமாநாட்டின் தலைப்பாகும். நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலம் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் சென் சியா தோங் தெரிவித்தார்.

இவ்வுச்சி மாநாட்டில் ஆப்பிரிக்காவின் பல நாட்டுத் தலைவர்கள், ஆப்பிரிக்க லீக் தலைவர் முதலியோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் ஐ.நா தலைமைச் செயலாளர் சிறப்பு பிரதிநிதியாக பங்கெடுக்க உள்ளார்.

தொடர்புடைய சர்வதேச மற்றும் பிரதேசங்களின் அமைப்புகள், பார்வையாளர்களாக சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் பங்கெடுக்கும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author