விமான வர்த்தக போர்:கனடா மீது 50% வரி விதிக்க போவதாக டிரம்ப் மிரட்டல்  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தக கோரிக்கைகளை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்கும் தந்திரமாக வரிகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.
வியாழக்கிழமை, கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் அல்லது வழங்கும் நாடுகளின் பொருட்களுக்கு வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.
தற்போது தனது ‘Truth Social’ தளத்தில் கனடா அரசுக்கு எதிராக கடுமையான பொருளாதார மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் Gulfstream நிறுவனத்தின் விமானங்களுக்கு கனடா சான்றிதழ் வழங்க மறுப்பதே இந்த மோதலுக்கு காரணமாகும்.
அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் 500, 600, 700 மற்றும் 800 ரக ஜெட் விமானங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்றும், அவற்றுக்குக் கனடா அரசு சட்டவிரோதமாகச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author