நவ. 18 ஆம் தேதி தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா

Estimated read time 1 min read

தவெகவின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நவ. 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இன்று (நவ.4) தவெக சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை வென்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். முதற்கட்டமாக 30 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கபட்டது.

இந்நிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நவ. 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முதல்வர் விஜய் பாராட்டு சான்று, ஊக்கத்தொகை வழங்க உள்ளார். 3 ஆம் கட்ட நிகழ்ச்சி 27-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author