சென்னையில் பயங்கரம்..! கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு அரிவாள் வெட்டு..!

Estimated read time 1 min read

சென்னையில் கடந்த 13ம் தேதி மாலை, கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனரை இளைஞர்கள் சிலர் வெட்டும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவர் ஜெயந்தியின் போது தற்காலிக நடத்துநரின் நண்பருக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக, நண்பருக்குப் பதிலாக நடத்துநரைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பயணிகள் சிதறியடித்து ஓடினர். படுகாயமடைந்த நடத்துநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்ட பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதில் படுகாயமடைந்த நடத்துனர் நித்திய நாதன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுனர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author