இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் என தன்னை வர்ணித்த நியூசிலாந்து பிரதமர்  

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது, ​​நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி, இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் எனக் கூறியதோடு, மோடியுடனான தனது தொடர்பு மிகவும் அருமையாக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் விவரித்தார்.
நியூசிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டிய லக்சன், இந்தியாவுடன் ஆழமான, பரந்த மற்றும் வலுவான உறவை உருவாக்குவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தார்.
மேலும், ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதற்காக தூதுக்குழுவினருடன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author