ஒரு குடும்பத்துக்கு 5 ஆடுகள் இலவசம்- அரசாணை வெளியீடு

Estimated read time 1 min read

தமிழகத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு அதிரடியாக ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் *”வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்”* என்ற புதிய திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி 2026 அன்று சட்டசபையில் நிதி அமைச்சர் செய்த பட்ஜெட் அறிவிப்பின் படி, கடந்த 28.10.2026ன் படி இந்த திட்டத்திற்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டமாகும். கிராமப்புறங்களில் வாழும் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னையை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 100 தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாக்குகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 3493 கிராமங்களில், ஒரு ஊராட்சிக்கு 8 பேர் வீதம் மொத்தம் 30,000 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் 100% மானியத்தில் இலவசமாக வழங்கப்படும். அதாவது மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன. ஒரு ஆட்டின் விலை ரூ.6,000 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பயனாளிக்கு 5 ஆடுகளுக்கு ரூ.30,000 வழங்கப்படும். இது தவிர ஆடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்ய ரூ.1500, தீவனம் வாங்க, கொட்டகை போட முதற்கட்ட ஊக்கத்தொகையாக ரூ.2500, ஒரு வருடம் வளர்த்த பின் ஊக்கத்தொகையாக ரூ.2000 என அனைத்தும் அரசே ஏற்கிறது. மொத்த திட்டத்திற்கு ரூ.110 கோடி தேவைப்பட்டாலும், தற்போது ரூ.109.75 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author