அரசியலில் பரபரப்பு! புதிய கட்சியை தொடங்கும் ராமதாஸ் மகள்!

Estimated read time 1 min read

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி வரும் டிசம்பர் 6, 2026 அன்று சென்னையில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

PMK Women's Conference Ramadoss who pushed his daughter off the field  Anbumani standing stunned

பாமகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் பாமக இரண்டு அணியாக பிரிந்தது. அன்புமணி ஒரு அணியாகவும், ராமதாஸ் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர். அப்போது ராமதாஸ் தனது அணியில் செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதி என்கிற ஸ்ரீகாந்திமதியை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் தான் பெரிய ட்விஸ்ட் நடந்தது. பாமக தலைவர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் மற்றும் கட்சி கொடி இரண்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தது. தேர்தல் ஆணையமும் அன்புமணியை தான் அதிகாரப்பூர்வ தலைவராக அங்கீகரித்தது.

இதனால் ராமதாஸ் தரப்பினர் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ராமதாஸ் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை, மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவினர். மறுபுறம், அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அன்புமணி தரப்பு 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 எம்எல்ஏக்களை பெற்று வெற்றி பெற்றது. ஆனால் ராமதாஸ் தரப்பு ஒரு தொகுதி கூட ஜெயிக்காமல் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு இந்த சூழலில் மீண்டும் ராமதாஸ், அன்புமணி இருவரும் இணைந்தனர். ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது முழுமையாக கட்சி அன்புமணி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில் தற்போது ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸின் ஆதரவாளர்கள் சிலர் அன்புமணி தலைமை பொறுப்புக்கு வந்ததை ஏற்கவில்லை. அவர்கள் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். அவர்கள் தான் இப்போது ஸ்ரீகாந்திமதிக்கு ஆதரவாக வரலாம் என்றும், காந்திமதியின் புதிய கட்சியில் இணையலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீகாந்திமதி வன்னியர் வாக்குகளை குறிவைத்து களமிறங்கினால், அது பாமகவுக்கு போட்டியாக இருக்குமா? என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author