2025ஆம் ஆண்டில் மக்களுக்கான 38 வாழ்வாதார திட்டப்பணிகளில் சிசாங் 1.87 ஆயிரம் கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 1 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்று 31ஆம் நாள் நடைபெற்ற சிசாங் தன்னாட்சி பிரதேசத்தின் 12வது மக்கள் பேரவையின் 4வது அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடிமக்களுக்கான அடிப்படை ஓய்வூதியத் தொகையை சிசாங் ஐந்து முறை உயர்த்தியுள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடிமக்களின் நபர் வாரி செலவழிப்பு வருமானம் 2021ஆம் ஆண்டில் இருந்த 46,503 யுவான் மற்றும் 16,935 யுவானிலிருந்து, முறையே 58,794 யுவான் மற்றும் 23,184 யுவானாக அதிகரித்துள்ளன.
2026ஆம் ஆண்டில் 1.36 ஆயிரம் கோடி யுவான் நிதி ஒதுக்கீட்டில் 34 வாழ்வாதார திட்டப்பணிகளை மேற்கொள்ள சிசாங் திட்டமிட்டுள்ளது.
